தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை அறிமுகம்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் சேவை அறிமுகம்

தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று (28.06.2024 ) முதல் பேட்டரியில் இயங்கும் கார் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சேவை மூத்த குடிமக்கள், திவ்யாஞ்சன் பயணிகள், கர்ப்பிணிகள் மற்றும் பிற பயணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

சென்னை எவால்வ் டைனமிக்ஸ் நிறுவனம் மூன்று வருட காலத்திற்கு இந்த வசதியை வழங்குவதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த பேட்டரி காரில் 6 நபர்கள் வரை பயணிக்கலாம்.
ஒரு பயணிக்கு ரூ.10/வீதம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

பயணிகள் இந்த பேட்டரி கார் வசதியை பெற 875 4404 310 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை சந்திப்பு, திண்டுக்கல், ராமநாதபுரம் மற்றும் விருதுநகர் ரயில் நிலையங்களில் பேட்டரி மூலம் இயக்கப்படும் கார் வசதி ஏற்கனவே உள்ளது.

மேலும், திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி ரயில் நிலையங்களில் இந்த வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )