
தூத்துக்குடி மாநகராட்சி 4 மண்டலங்களிலும் வாரம் ஒரு நாள் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெறும்- மேயர் ஜெகன் பொியசாமி தகவல்
தூத்துக்குடி மாநகராட்சி சாதாரண கூட்டம் மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் ஜெகன் பொியசாமி தலைமையில் ஆணையர் மதுபாலன், துணை மேயர் ஜெனிட்டா, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேயர் ஜெகன் பொியசாமி தொடக்கவுரையில் பேசுகையில்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு படி மாநகராட்சிக்குட்பட்ட 60வது வார்டு பகுதிகளிலும் பாரபட்சமின்றி கட்டமைப்பு பணிகளான சாலை கால்வாய் உள்பட அடிப்படை பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இன்னும் இருக்கின்ற சில பணிகளும் 3மாதத்தில் தொடங்கும் மழை காலத்திற்குள் முடிக்கப்படும் மாசு இல்லாத மாநகரை உருவாக்கும் வகையில் எல்லா பகுதிகளிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு தொடர்ந்து அப்பணிகள் நடைபெற்று வருகின்றன. தருவைகுளம் குப்பை கிடங்கு பகுதிகளில் 70 ஆயிரம்மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. அதை ஓரு லட்சமாக மாற்றுவதற்கான பணிகள் நடைபெறுகிறது. போக்கு வரத்து நொிசலை குறைக்கும் வகையில் மக்கள் நலன் கருதி சில பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி விாிவான சாலையில் உருவாக்கியுள்ளோம். வி.இ. ரோடு, அண்ணாநகர் ரோடு சாலைகளில் இருபுறமும் பார்க்கிங்க வசதிக்கும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் 7 ஆயிரம் சாலையோர வியாபாாிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டு அவர்களும் வியாபாரம் செய்து வருகின்றன. அந்த பகுதிகளிலும் இதனால் இடையூறுகள் ஏற்படும் என்றால் அதையும் ஓழுங்குப்படுத்தி சீரமைக்கப்பட்டு விபத்துக்கள் இல்லாத மாநகரை உருவாக்குவோம். அதே போல் பழுதடைந்துள்ள பூங்காக்கள் சீரமைக்கப்பட்டு புதிய பூங்காக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் பொதுமக்கள் பல்வேறு வகையில் பலனடைந்துள்ளனர். முத்துநகர் கடற்கரை, ரோச்பூங்கா போன்றவைகளும் நல்லமுறையில் செயல்பட்டு வருகின்றன. தொடர்ந்து அனைவரும் இனைந்தே மக்கள் பணியாற்றுவோம் என்று பேசினார்.
31 தீர்மானங்கள்:
அதன்பின் கூட்டத்தில் தூத்துக்குடி மாநகராட்சியில் தற்பொழுது 90.66 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் 60 வார்டுகளை உள்ளடக்கியதாக உள்ளது. 2019ம் ஆண்டு கணக்குபடி மக்கள் தொகை 3,72,408 ஆகும். தற்போது மாநகராட்சி பகுதிக்கு பல்வேறு திட்டங்கள் மூலம் தற்போது 66.20 எம்.எல்டி குடிநீர் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையத்திலிருந்து பம்பிங் செய்யப்பட்டு 30 மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தூத்துக்குடி மாநகர பகுதிமக்களுக்கு 600 கிலோ மீட்டர் பைப் லைன் குழாய் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. அடிக்கடி ஏற்படும் தண்ணீர் குழாய்கள் உடைப்பு தண்ணீர் கசிகள் சாியான முறையில் தண்ணீரை மக்களுக்கு பகிர்ந்து அளித்தல் ஆகிய பணிகளை செய்ய போதுமான நிரந்தர பணியாளர்கள் இல்லததால் சிஎல்சி மூலம் தற்காலிக அடிப்படையில் 23 24ம் ஆண்டு மாவட்ட கலெக்டாின் செயல்முறை ஆணையின் படி நிர்ணயம் செய்யப்பட்டு தினக்கூலி அடிப்படையில் 1.4.2024 முதல் 31.3.2025 வரை ஒரு வருட காலத்திற்கு பணியாளர்கள் நியமணம் செய்வதற்கு உத்தேச செலவின தொகையாக ஆண்டிற்கு 95 லட்சம் மாமன்றத்தில் அனுமதி வேண்டப்படுகிறது உள்பட 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கவுன்சிலர்கள் கோரிக்கை:
இதனையடுத்து திமுக மண்டலத்தலைவர் நிர்மல்ராஜ், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், சுரேஷ்குமார், ராமகிருஷ்ணன், நாகேஸ்வாி, வைதேகி, முத்துவேல், இசக்கிராஜா, ரெங்கசாமி, கந்தசாமி, ஜெயசீலி, ரெக்ஸின், ஜான், காங்கிரஸ் கவுன்சிலர் சந்திரபோஸ், சிபிஎம் கவுன்சிலர் முத்துமாாி, இந்தியயூனியன் முஸ்ஸீம் லீக் கவுன்சிலர் மும்தாஜ், மதிமுக கவுன்சிலர் ராமு அம்மாள், உள்ளிட்டோர் தங்களது பகுதிகளில் நிறைவேற்றிய பணிகளுக்கு நன்றி தொிவித்தும் நிறைவேற்ற வேண்டிய பணிகள் குறித்தும் பேசினார்கள்.
மாநகராட்சி மண்டலத்தலைவர் கலைச்செல்வி, கவுன்சிலர்கள் பொன்னப்பன், ராஜேந்திரன், பட்சிராஜ், காங்கிரஸ் கவுன்சிலர் கற்பகனி, உள்ளிட்டோர் கோாிக்கை மனுக்களை மேயர் ஆணையாிடம் வழங்கினார்கள்.
பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம்:
பின்னர் மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில்,
மக்கள் பயன்பாட்டிற்காக முக்கிய பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் முழுமையாக முடிவுபெற்றுள்ளது. சிறிய குறுகலான சந்துக்கள் பகுதி மட்டும் சாலைகள் அமைக்கப்பட வேண்டியுள்ளது. சில இடங்களில் பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது. நீங்கள கூறிய கருத்துக்கள் அனைத்தும் குறிப்பெடுக்கப்பட்டு எதற்கு முக்கியத்துவம் என கண்டறியப்பட்டு ஒன்றன்பின் ஓன்றாக செய்து கொடுக்கப்படும். இதற்கிடையில் 60வது வார்டு பகுதிகள் உள்ள மாநகராட்சி பகுதியில் 30 வார்டுகளில் முழுமையாக 100 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன, இதை தவிர்த்து சில குறைபாடுகள் புகாராகவும், தகவல்களாகவும் வரப்பெற்றுள்ளது நாம் கடந்த காலங்களில் மிகப்பொிய மழை வௌ்ளம் எல்லா வற்றிலும் கடந்து பணியாற்றியுள்ளோம் மேலும் ஓரு மகிழ்ச்சியான செய்தியாக நான்கு மண்டலம் பகுதிகளிலும் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை ஒவ்வொரு பகுதியை தேர்வு செய்து அந்த இடத்தில் நான் ஆணையர் உள்பட அனைத்து துறை அதிகாாிகளும் கலந்து கொள்ளும் பொதுமக்கள் குறைதீா்க்கும் முகாம் நடைபெறும். அதில் மாநகராட்சிக்கு சம்பந்தபட்ட குறைகள் ஏதுவாக இருந்தாலும் உடனடியாக அந்த இடத்தில் தீர்த்து வைக்கப்படும். இதற்கு அனைவரும் முழுமையாக ஓத்துழைப்பு வழங்க வேண்டும். என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் இணை ஆணையா் ராஜாராம், செயற்பொறியாளர் பாஸ்கர், உதவி செயற்பொறியாளர் சரவணன், உதவி ஆணையா்கள் தனசிங், சுரேஷ்குமார், கல்யாணசுந்தரம், சொர்ணலதா, ஸ்மார்ட் சிட்டி திட்ட செயற் பொறியாளா்கள் ராமசந்திரன், ரெங்கநாதன், நகா்நல அலுவலர் டாக்டர் தினேஷ், சுகாதார ஆய்வாளர்கள் ஹாிகணேஷ், ராஜசேகா், ஸ்டாலின் பாக்கியநாதன், ராஜபாண்டி, கவுன்சிலா்கள் ஜாக்குலின் ஜெயா, சரவணக்குமாா், ஜான்சிராணி, விஜயக்குமார், ராஜதுரை, கண்ணன், தெய்வேந்திரன், தனலட்சுமி, விஜயலட்சுமி, மெட்டில்டா, சுப்புலட்சுமி, சுதா,ரிக்டா, சரண்யா, அதிஷ்டமணி, சோமசுந்தாி, பேபி ஏஞ்சலின், உள்பட கவுன்சிலர்கள் அதிகாாிகள் கலந்து கொண்டனர்.