
திருச்செந்தூர் அருகே கட்டிட தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை – போலீஸ் விசாரணை
திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி பகுதியில் கட்டிட தொழிலாளி மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரியைச் சேர்ந்தவர் கணேசன் மகன் அம்பேத்கர் (32). இவர் கட்டிட வேலைக்காக மூன்று நாட்களுக்கு முன்பு திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி வீரப்பநாடார் குடியிருப்புக்கு வந்துள்ளார். இந்நிலையில் வீரப்ப நாடார் குடியிருப்பு சாலையில் உள்ள மரத்தில் இன்று காலை அம்பேத்கர் தூக்கிட்டு இறந்த நிலையில் தொடங்கியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த திருச்செந்தூர் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அம்பேத்கர் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
உயிரிழந்த அம்பேத்கர் குடும்ப பிரச்சினை காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாரா.? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து திருச்செந்தூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.