
கோவில்பட்டி அருகே ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது – 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே இனாம் மணியாச்சி பகுதியில் கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த வாகனத்தை சோதனையிட்ட போது 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை சிவகாசியில் இருந்து கோவில்பட்டிக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதுத்தொடர்பாக கோவில்பட்டி சங்கரலிங்கபுரத்தைச் சேர்ந்த பாண்டி (27), கழுகுமலையை சேர்ந்த பாலமுருகன் (28) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கடத்திவரப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
CATEGORIES மாவட்டம்