தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு

தூத்துக்குடியில் வழக்கறிஞர்கள் இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்து வருகின்றனர்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பின் முடிவின்படி புதிய *BNS, BNSS, BS* ஆகிய சட்டங்களை முழுமையாக திரும்பப்பெற வேண்டும் என்றும் மேற்படி சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் தினமான இன்று 01.07.2024 திங்கட்கிழமை ஒருநாள் மட்டும் தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்கத்தின் உறுப்பினர்கள் அனைவரும் நீதிமன்ற பணிகளுக்கு செல்லாமல் இருப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி தூத்துக்குடியில் உள்ள 152 பெண் வழக்கறிஞர்கள் உட்பட852 வழக்கறிஞர்கள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்துள்ளனர். இதனால் தூத்துக்குடி நீதிமன்றத்தில் இன்று நடைபெற வேண்டிய விசாரணை வழக்குகள் அனைத்தும் மறு தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் தனசேகர் டேவிட் கூறியதாவது, மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று ஏற்கனவே தூத்துக்குடியில் வழக்கறிஞர் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. தற்போது இந்த மூன்று சட்டங்களும் இன்று முதல் அமலுக்கு வருவதால் தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சில் எடுத்த முடிவு படி இன்று ஒரு நாள் நீதிமன்றம் புறக்கணிப்பு செய்து உள்ளோம். அடுத்த கட்டமாக பார் கவுன்சில் முடிவு படி மிகப் பெரிய போராட்டங்கள் நடத்தப்படும் என்று அவர் கூறினார்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )