தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது – ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது – ஆட்சியர் லட்சுமிபதி தகவல்

தூத்துக்குடி பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகள் தேர்தல் செலவின பார்வையாளர்களால் ஆய்வு செய்யபட்டு வருகிறது – மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி தெரிவித்துள்ளார்.

மக்களவை பொது தேர்தல் 2024, 36 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவின கணக்குகளை ஆய்வு செய்திட, இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட தேர்தல் செலவின பார்வையாளர்கள் மரு. எஸ். எஸ். ஸ்ரீஜு, இ.வ.ப., மற்றும் அஜய் ரூமல் கார்டே, இ.வ.ப. ஆகியோர் 29.06.2024 அன்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை புரிந்தனர். மேற்படி தேர்தல் செலவின பார்வையாளர்களால் 01.07.2024 மற்றும் 02.07.2024 ஆகிய தினங்களில் 36 தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவு கணக்குகள் ஆய்வு செய்து, ஒத்திசைவு செய்யப்பட்டு வருகிறது என மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கோ.லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )