Breaking News
ரூ.2000 நோட்டை அச்சிட ஆகும் செலவு ரூ.3.77: நிதித்துறை ராஜாங்க மந்திரி தகவல்

புதிதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 நோட்டுகளை அச்சிடும் செலவு ரூ.3.77 என பாராளுமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000, நோட்டுகளை கடந்த ஆண்டு நவம்பர் 8-ந் தேதி செல்லாது என மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து புதிதாக ரூ.2,000 மற்றும் ரூ.500 நோட்டுகள் அச்சிடப்பட்டு, புழக்கத்துக்கு வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக டெல்லி மேல்-சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு நிதித்துறை ராஜாங்க மந்திரி அர்ஜூன்ராம் மேக்வால் எழுத்து மூலம் நேற்று பதிலளித்தார். அந்த பதிலில் இடம் பெற்றுள்ள தகவல்கள்

* ரூ.500 நோட்டு ஒன்றை அச்சிடுவதற்கு ரூ.2.87 முதல் ரூ.3.09 வரை செலவு ஆகிறது.

* ரூ.2,000 நோட்டு ஒன்றை அச்சிட ஆகும் செலவு ரூ.3.54 முதல் ரூ.3.77 வரை ஆகும் எனவும்

* புழக்கத்திலிருந்த ரூ.500 மற்றும் ரூ.1,000, நோட்டுகளை ஒழித்து அவற்றுக்கு பதிலாக புதிய ரூபாய் நோட்டுகளை அச்சிடுவதற்காக ஆன மொத்த செலவு இன்னும் கணக்கிடப்படவில்லை. காரணம், தொடர்ந்து புதிய ரூபாய் நோட்டுகள் அச்சிடப்படுகின்றன.

* நாட்டில் தற்போது புழக்கத்திலுள்ள ரூபாய் நோட்டுகளின் மதிப்பு ரூ.11 லட்சத்து 64 ஆயிரம் கோடி ஆகும்

என, அந்த பதிலில் கூறப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.