
தூத்துக்குடி துறைமுக யூனியன் சார்பில் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
தூத்துக்குடி துறைமுகம் யூனியன் சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி துறைமுக யுனைடெட் ஜெனரல் ஒர்க்கர்ஸ் சங்கத்தின் சார்பாக பள்ளி மாணவ மாணவிகளுக்குநோட்,புக்,பேக் மற்றும் பள்ளி உபகரணங்கள் மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி சங்க அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு சங்க செயல் தலைவர் தேவதாஸ் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ஜி.ஜான் கென்னடி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட், புத்தகம் மற்றும் உபகரணங்கள், பேக் 10 மாணவ, மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை உள்பட 50 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில், சங்க தலைவர் கிளின்டன் பெர்னாண்டோ, பி.எஸ்.ஏ. சிகால் ஸ்டாப்யூனியன் தலைவர் கிங்ஸ்டன், துணைத் தலைவர் லிவிங்ஸ்டன், துணை பொதுச்செயலாளர் ஜூட் ரஞ்சித், சீனிவாசன் ,சரவணகுமார், பிரபாகர் சந்திரன், மோசஸ், சங்க மகளிர் அமைப்பு சார்பில் ஜெயா மல்லிகா, தலைமலை ஹரிஹரசுதன், கணிஸ்டன் உள்பட சங்க நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.