பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார்

பெண்களுக்கு உாிமைத்தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் திமுக ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் கீதாஜீவன் விக்கிரவாண்டியில் பேசினார்

தூத்துக்குடி திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி, விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு முண்டியம்பாக்கம் ஊராட்சி 212வது பாகத்திற்குட்பட்ட காலனி பகுதியில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் பொது மக்களை நேரில் சந்தித்து இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து ேபசுகையில் கடந்த 10 ஆண்டுகாலம் அதிமுக ஆட்சியில் எந்த பணியும் முறையாக நடைபெறவில்லை. புதிய தொழில் தொடங்க வில்லை. மக்கள் நலனில் அக்கறை இல்லாத அரசாக இருந்தது.

திமுக ஆட்சி பொறுப்பேற்ற பின் திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் மக்கள் நலன் தான் முக்கியம் என்ற எண்ணத்தில் தமிழக மக்களுக்காக பணியாற்றி வருகிறார். கடந்த 37மாதங்களாக தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகள் மட்டுமின்றி சொல்லாத திட்டங்களையும் தற்போது செயல்படுத்தி வருகிறார். நாட்டுநலனில் எப்போதும் சிந்தித்து பணியாற்றும் முதலமைச்சரை நாம் பெற்றுள்ளோம். இந்த தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஓட்டுமொத்தமாக அனைவரும் வாக்களிக்க வேண்டும். அவர் வெற்றியின் மூலம் இந்த பகுதி மேலும் வளா்ச்சியடையும் உங்களுக்கான அரசு சாா்ந்த அனைத்து திட்டங்களும் முறையாக வந்து சேரும். மகளிர்களுக்காக உாிமைத்தொகை உள்ளிட்ட பல உாிமைகள் இந்த ஆட்சியில் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. என்று பேசினார்.

உடன் மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கோவில்பட்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் பீக்கிலிப்பட்டி முருகேசன், விக்கிரவாண்டி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் ஜெயபால், ஒன்றிய கவுன்சிலர் இளவரசி ஜெயபால், கிளைச் செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )