கணவருடன் தீபா மோதல்: காரணம் என்ன
பண விவகாரம் காரணமாகவே, தீபாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது.
ஜெ., மறைவுக்கு பின், அவரது அண்ணன் மகள் தீபா, ‘எம்.ஜி.ஆர்., அம்மா தீபா பேரவை’ என்ற அமைப்பை துவக்கினார். அதற்கு துணையாக இருந்த, அவரது கணவர் மாதவன் பேட்ரிக், திடீரென புதிய கட்சி துவங்க போவதாக அறிவித்துள்ளார். இது, தீபா ஆதரவாளர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதுபற்றி, தீபா ஆதரவாளர்கள் கூறியதாவது: பன்னீர்செல்வத்துடன் இணைந்து செயல்படப் போவதாக அறிவித்தார். அதன்பின் பன்னீர்செல்வத்தை, மரியாதை நிமித்தமாக சந்தித்ததாகவும், தனித்து இயங்கப் போவதாக வும், தீபா தெரிவித்தார்.பேரவை துவங்குவதற்காக, உழைத்தவர்களுக்கு, பதவி தரவில்லைஎன, குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து, புதிய நிர்வாகிகள் விரைவில் நியமிக்கப்படுவர் என்றார்.
அவர், தன் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டே இருந்ததால், அவரை ஆதரித்தவர்கள், பன்னீர்செல்வம் பக்கம் சென்றனர். இந்தசூழலில், அவரது கணவர் மாதவன் பேட்ரிக், பேரவையில் இருந்து விலகுவதாகவும், தனிக்கட்சி துவங்கப் போவதாகவும், நேற்று முன்தினம் அறிவித்தார்.
இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதற்கு, பண விவகாரம் தான் காரணம்.
பேரவையில் பதவி பெறுவதற்காக, சிலர் மாதவனி டம் பணம் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு பதவி வழங்க, தீபா மறுத்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. மேலும், மாதவன் பின்னணியில், தினகரன் இருப்பதாகவும், குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை, மாதவன் மறுத்துள்ளார்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
யாரோ இயக்குகிறாங்க: ”என் கணவர் தனி கட்சி துவக்குவேன் என அறிவித்திருப்பது, அதிர்ச்சி அளிக்கிறது. அவரை யாரோ சிலர் இயக்குகின்றனர்,” என, தீபா கூறினார்.
அவர் அளித்த பேட்டி:
பேரவை தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டி யிடுவேன் என அறிவித்ததால், வதந்திகளை பரப்பி வருகின்றனர். பேரவையை கலைத்து விட்டதாக, வதந்திகளை பரப்புகின்றனர். வதந்திகளுக்கு பின்னால், சசிகலா குடும்பம் உள்ளது என்பதில், மாற்றுக் கருத்து இல்லை. பேரவையில், அ.தி.மு.க., தொண்டர்கள் இணைந்து விடுவர் என்ற அச்சத்தில், இவ்வாறு செயல்படுகின்றனர்.
அரசியலை விட்டு நான் ஓட வேண்டும் என்பதற்காக, பல்வேறு வடிவங்களில் தொல்லைகளை தருகின்றனர். ஆர்.கே.நகரில், எந்த சின்னம் கொடுத்தாலும், அதில் போட்டி யிடுவேன். கணவன் – மனைவி என்ற உறவில், எங்களுக்குள் எந்த பிரிவினையும் இல்லை. இவ்வாறு தீபா தெரிவித்தார்.