
அரசு வழங்கிய பட்டாவை அரசு பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும் – முதலமைச்சருக்கு தூத்துக்குடி காங்கிரஸ் கவுன்சிலர் கோரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சி 34வது வார்டு காங்கிரஸ் மாமன்ற உறுப்பினரும், பணிநியமண குழு உறுப்பினருமான சந்திரபோஸ், தமிழக முதலமைச்சர் முக.ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள கோாிக்கை மனுவில் கூறியிருப்பதாவது,
தூத்துக்கு மாநகராட்சி 34வது வார்டில் இலங்கை அகதிகளாக வரப்பட்டு ஸ்பின்னிங் மில் தொழிற்சாலையில் பணியில் அமர்த்தப்பட்டு பின்பு சின்னமணி நகா் சிலோன்காலணி பகுதியில் குடிசை வீடுகளாக கட்டிக்கொடுத்து 148 குடும்பங்கள் 1977ல் மேற்கண்ட முகவாியில் குடியிருந்து வந்தனர். அவர்கள் பலவித போராட்டங்களுக்கு பின்பு தாங்கள் துணை முதல்வராக இருந்தபோது தங்கள் பொற்கரத்தால் அவர்களுக்கு பட்டா வழங்கினீா்கள் அதன் பயனாக தமிழ்நாடு குடிசமைாற்று வாாியம் மூலமாக மேற்கண்ட குடும்பங்களுக்கு ஓன்றிய அரசின் ராஜீவ்காந்தி யோஜனா திட்டம் மூலமாகவும், தமிழக அரசின் மூலமாகவும் வீடுகள் கட்டிக்கொடுத்து தற்போது அப்பகுதி மக்கள் குடியிருந்து வருகின்றனர்.
அப்போது தாங்கள் வழங்கிய பட்டாவை பெற்றுக்கொண்டு புதிய பட்டா வழங்கப்படும் என்று குடிசை மாற்று வாாியம் தொிவித்தது. பின்பு கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் 10 மாதத்திற்கு முன்பு தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அமைச்சர் கீதாஜீவன் முன்னிலையில் புதிய பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இதுவரை பட்டாவை அரசு பதிவேட்டில் ஏற்றவில்லை. அப்பகுதி மக்கள் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் நடவடிக்கை இல்லை. மேலும் தற்போது வரை குடிசை மாற்று வாாியம் பெயாில் தான் வீட்டுத்தீர்வை குடிநீர் கட்டண தீர்வை செலுத்தி வருகின்றனா்.
எனவே, இதனால் அந்த பட்டாவால் எந்தவித நன்மையும் இல்லை. இதில் நான்கு பேருக்கு எழுத்து பிழை வேறு உள்ளது. எனவே மக்களின் முதல்வராகிய தாங்கள் மேற்கண்ட சிலோன் காலணி மக்களுக்கு பட்டாைவை அரசாங்க பதிவேட்டில் பதிவு செய்து வழங்கிட தங்களை மேற்கண்ட பகுதி மக்கள் சார்பாக கேட்டுக்காௌ்கிறேன் என்று அந்த மனுவில் தொிவித்துள்ளார்