தூத்துக்குடி: முக்காணி டாஸ்மாக் கடையில் ஓசி மதுபாட்டில் கேட்டு ஊழியரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

தூத்துக்குடி: முக்காணி டாஸ்மாக் கடையில் ஓசி மதுபாட்டில் கேட்டு ஊழியரிடம் தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்த ரவுடி கைது

தூத்துக்குடி மணியாச்சி மருதன்வாழ்வு பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகன் பால்பாண்டி (46) என்பவர் முக்காணி அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில் கடந்த 05.07.2024 அன்று டாஸ்மாக் கடைக்கு வந்த முக்காணி வடக்கு யாதவர் தெருவை சேர்ந்த பூவன் (எ) அய்யாதுரை மகன் வேம்படிமுத்து (எ) சின்ன முண்டன் (36) என்பவர் டாஸ்மாக் ஊழியர் பால்பாண்டியிடம் பணம் கொடுக்காமல் மதுபாட்டில் தருமாறு தகராறு செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இதுகுறித்து பால்பாண்டி அளித்த புகாரின் பேரில் ஆத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர்  மகாராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு மேற்படி  வேம்படிமுத்து (எ) சின்ன முண்டன் என்பவரை கைது செய்தார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (1 )