சத்து நிறைந்த முருங்கைப்பூ உணவு: சூப்
என்னென்ன தேவை?
பொடியாக நறுக்கிய முருங்கைப்பூ- 1 கப்
தனியாத் தூள் – 2 டீஸ்பூன்
சீரகம் – ஒரு டீஸ்பூன்
மிளகுத் தூள், சுக்குத் தூள் – தலா ஒரு டீஸ்பூன்
பூண்டு – 5 பல்
சின்ன வெங்காயம் – 10
கடுகு – அரை டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
தனியாத் தூள், சீரகம், மிளகுத் தூள், சுக்குத் தூள், பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து அரையுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளியுங்கள். பிறகு அரை லிட்டர் தண்ணீரைக் கலவையில் கலக்கி ஊற்றி, பச்சை வாசனை போகும்வரை கொதிக்கவிடுங்கள். பொடியாக நறுக்கிய முருங்கைப்பூவைச் சேர்த்துக் கொதிக்கவிடுங்கள். பூ நன்றாக வெந்ததும் இறக்கிவைத்துச் சூடாகப் பரிமாறுங்கள். விரும்பினால் ஒரு டீஸ்பூன் நெய் சேர்த்துக் குடிக்கலாம். இதை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் சளித் தொல்லை உடலை அண்டாது.