காசோலை மோசடி செய்ததாக பொய் வழக்கு – தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

காசோலை மோசடி செய்ததாக பொய் வழக்கு – தூத்துக்குடி விரைவு நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு

தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவர் தனது மைத்துனரான தொழிலதிபர் தனசேகரன் என்பவர் தன்னிடம் (15 லட்சம்) பதினைந்து லட்சம் கடன் பெற்றுக் கொண்டு அதற்கு பதிலாக 3 காசோலைகளை வழங்கியதாகவும், காசோலைகளை வங்கியில் கொடுத்தபோது பணமில்லை என திரும்பிவிட்டதாகவும், எனவே, கடன் பெற்று மோசடி செய்ததாக தனசேகரன் மீது காசோலை மோசடி வழக்கு தாக்கல் செய்தார். இவ்வழக்கு விசாரணை தூத்துக்குடி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கினை விசாரித்த விரைவு விசாரணை நீதிமன்ற நீதிபதி ஜலதி, வழக்கினை தள்ளுபடி செய்து தனசேகரனை குற்ற வழக்கிலிருந்து விடுவித்து தீர்ப்பளித்தார்.

இந்த வழக்கில் தனசேகரன் சார்பாக வழக்கறிஞர் சுபேந்திரன் ஆஜரானார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )