பயங்கரவாதிகள் ஊடுருவல்: மத்திய அரசுக்கு வங்கதேசம் எச்சரிக்கை
இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் மே.வங்கம், அசாம், திரிபுரா மாநிலங்களுக்குள் ஊடுருவியுள்ளதாக வங்கதேச அரசு, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு தகவல் அனுப்பியுள்ளது.
இது தொடர்பாக வங்கதேச அரசு அனுப்பிய அறிக்கை; ஹர்கத் உல் ஜிகாதி அல் இஸ்லாமி, வங்கதேச ஜமாத் உல் முஜாஹிதீன் ஆகிய அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் மேற்கு வங்கம், அசாம், திரிபுராவுக்குள் ஊடுருவியுள்ளனர்.. இந்த இரு அமைப்பை சேர்ந்த 2010 பயங்கரவாதிகள் ஊடுருவியுள்ளனர். 720 பயங்கரவாதிகள் மேற்கு வங்க மாநிலத்திலும், 1,290 பயங்கரவாதிகள் அசாம், திரிபுரா மாநிலங்களுக்குள் ஊடுருவியுள்ளனர். கடந்த 2015ம் வருடத்தை விட 2016ல் ஊடுருவிய பயங்கரவாதிகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.