பணியிடங்களில் பாலியல் தொல்லை: 90 நாட்கள் சம்பள விடுமுறை
மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் பெண்கள், பாலியல் தொல்லைக்கு உள்ளானால், அவர்களுக்கு விசாரணை காலத்தில் 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பளத்துடன் விடுப்பு:
மத்திய அரசில் பணிபுரியும் பெண் ஊழியர்கள் பாலியல் தொலைக்கு உட்பாட்டால், அவர்களுக்கு 90 நாட்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்க மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சிறப்பு கமிட்டிகள், பாலியல் குறித்த விசாரணையை நடத்தும் காலத்தில், குற்றம் புரிந்தவர்கள் அச்சுறுத்தல்கள் விடுப்பதாக வந்த புகாரை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பரிந்துரையின்படி..
மேலும், இந்த விடுமுறை, விசாரணை கமிட்டியின் பரிந்துரையின்படி வழங்கப்படும் எனவும், பாலியல் புகார் கொடுக்கும் பெண்களுக்கு ஏற்கனவே இருக்கும் விடுமுறை காலத்திலிருந்து கழிக்கப்படாது எனவும் பணியாளர் நலத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.