Breaking News
22 பல்கலை.,கள் போலியானவை : யுஜிசி அதிர்ச்சி தகவல்

நாடு முழுவதும் இயங்கி வரும் 22 பல்கலைக்கழகங்கள் மற்றும் 66 கல்லூரிகள் போலியானவை என பல்கலைக்கழக மானியக்குழு (யூ.ஜி.சி) அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.

போலி கல்வி நிறுவனங்கள் :

பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி இயக்ககம் நாடு முழுவதும் உள்ள போலி கல்வி நிறுவனங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் மொத்தம் 279 போலி தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, போலி கல்வி நிறுவனங்கள் அதிகம் இருக்கும் பட்டியலில், டில்லி முதல் இடத்தில் உள்ளது. அங்கு மொத்தம் 66 போலி கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
குறிப்பாக,நாடு முழுவதும் உள்ள 22 போலி பல்கலைக்கழகங்களில், ஏழு பல்கலைக்கழகங்கள் டில்லியில் உள்ளதாம். இந்தக் கல்லூரிகள் அனைத்தும் டிகிரி சான்றிதழ்களை வழங்கத் தகுதியற்றவை. அவை வழங்கும் சான்றிதழ்கள், போலியானவை என்று கூறப்பட்டுள்ளது. மேலும், தெலுங்கானா, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்காளம், மஹாரஷ்ட்டிரா ஆகிய மாநிலங்களிலும் போலி கல்வி நிறுவனங்கள் அதிகளவு உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
எனவே, மாணவர்கள் அந்தக் கல்லூரிகளில் சேர வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற கல்லூரிகள் மற்றும் போலியான கல்லூரிகளின் விபரங்களை யூ.ஜி.சி இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.