
குரு பெயர்ச்சி பலன் 2024: குருவை பார்க்கும் சனி.. அதிர்ஷ்டத்தை அனுபவிக்கும் 6 ராசிக்காரர்கள்
மேஷ ராசியில் பரணி நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போகும் குரு பகவானை கும்ப ராசியில் உள்ள சனி பார்வையிடுகிறார். குரு பயணம் செய்யும் இடத்தை விட பார்க்கும் இடங்கள் பலன் பெரும். சனிபகவான் பார்வையில் நான்கு மாதங்கள் பயணம் செய்யும் குரு பகவானால் அதிர்ஷ்டத்தை அனுபவிக்கப் போகும் ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாம்.
துலாம்: ஏழாம் வீட்டில் பயணம் செய்யும் களத்திர ஸ்தான குருவின் நேரடி பார்வை உங்களுடைய ராசியின் மீது விழுகிறது. உங்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். உங்களின் தைரியம் தன்னம்பிக்கை கூடும். வேலை செய்யும் இடத்தில் செல்வாக்கு அதிகரிக்கும். பணம் பொருள் செல்வம் தேடி வரும். சுகமும் சந்தோஷமும் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் அதிகரிக்கும்.
விருச்சிகம் : ருண ரோக சத்ரு ஸ்தான குருவினால் எதிரிகள் தொல்லை அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளில் இருந்து ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். செய்யும் தொழிலில் கவனம் தேவை. குரு பார்வையால் பணவருமானம் அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருந்த சங்கடங்கள் தீரும் சந்தோஷங்கள் அதிகரிக்க குருபகவானை சரணடையுங்கள் நல்லது நடக்கும்.
தனுசு : உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் குரு பகவான் மீது சனியின் பார்வை விழுகிறது. குருவின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுகிறது. சமூகத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். பணவரவு தேடி வரும். நீண்ட நாள் கனவுகள் நனவாகும். புகழும் கீர்த்தியும் செல்வமும் செல்வாக்கும் அதிகரிக்கும். சித்திரை வரை நீங்கதான் ராஜா. சிறப்பான பலன்கள் தேடி வரப்போகிறது பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
மகரம்: சுக ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் வீடு நிலம் வாங்கும் யோகம் உண்டாகும். நிலம் வாங்குவதில் ஏற்பட்ட பிரச்சினைகள் தீரும். குரு பகவானின் பார்வை உங்களுடைய ராசிக்கு 12,10, 8 ஆம் வீடுகளின் மீது விழுவதால் சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷமும் சௌபாக்கியமும் பெருகும். மன நிம்மதி உண்டாகும்.
கும்பம்: தைரிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் குருவினால் உங்கள் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும் பணம் விசயத்தில் யாரையும் நம்பி ஏமாந்து போக வேண்டாம். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், பாக்ய ஸ்தானம், களத்திர ஸ்தானத்தின் மீது விழுகிறது. நீங்கள் செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும். திருமணம் நடைபெறும். வியாழக்கிழமை குருவிற்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் பாதிப்புகள் குறையும்.
ADVERTISEMENT
மீனம்: குரு பகவான் தனம், குடும்ப வாக்கு ஸ்தானத்தில் பயணம் செய்யும் இந்த நேரத்தில் விரைய ஸ்தானத்தில் உள்ள சனியின் பார்வை விழுகிறது. உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. நீண்ட நாள் கனவுகள் நனவாகும். பணம் வீடு தேடி வரும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரப்போகிறது. உங்களுடைய பிரச்சினைகள் அத்தனையும் தீரும் காலம் வந்து விட்டது. நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்க குரு பகவானை வழிபடுங்கள் நல்லதே நடைபெறும்.
Published on January 12, 2024
மேலும் guru peyarchi palan 2024 செய்திகள்
படம்
குரு பெயர்ச்சி பலன் 2024: சனி பார்வையில் குரு.. 4 மாதங்கள் கவனமாக இருக்க வேண்டியது யார்?
image
குரு பெயர்ச்சி பலன் 2024: பரணியில் பயணம் செய்யும் குரு… சுக்கிர யோகத்தால் 6 ராசிக்காரர்களுக்கு லக்னம்
குரு
பெயர்ச்சி பலன் 2024: வேலையில் புரமோசன்.. குரு பலனால் தேடி வரும் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்!
குரு பெயர்ச்சி பலன் 2024: குரு பார்வை.. கல்யாண வயசுதான் வந்துருச்சு.. யாரெல்லாம் பாடப்போறீங்க
குரு பெயர்ச்சி பலன் 2024: காசு.. பணம்.. துட்டு.. மணி.. குரு பார்வையால் யாரெல்லாம் அள்ளப்போறீங்க
குரு பெயர்ச்சி பலன்.. 2024ல் சொந்த கார் வாங்கும் 6 ராசிக்காரர்கள்.. ராஜ யோகம் தேடி வரும்