பேங்க் மினிமம் பேலன்ஸ்.. ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. 2 ஆண்டுகள் கெடு.. ஆர்பிஐ போட்ட உத்தரவு!

பேங்க் மினிமம் பேலன்ஸ்.. ஏப்.1 முதல் புது ரூல்ஸ்.. 2 ஆண்டுகள் கெடு.. ஆர்பிஐ போட்ட உத்தரவு!

வங்கியில் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை (Minimum Balance Charges) பார்த்து கடுப்பாகும் நபர்களின் வயிற்றில் பாலை வார்க்கும்படியான உத்தரவை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா (Reserve Bank of India) அனைத்து வங்கிகளுக்கும் அதிரடியாக அனுப்பியிருக்கிறது. இதுகுறித்த முழு விவரம் இதோ.

இப்போதெல்லாம், வங்கியில் நம்ம பணத்தை எடுக்கவும், பராமரிக்கவுமே ஆயிரத்தெட்டு ரூல்ஸ் வந்திருச்சு” என்று உச்சுக்கொட்டும் பலரை பார்த்திருப்போம். அதிலும், மினிமம் பேலன்ஸ் என்ற ரூல்ஸ் பலருக்கும் பெரும் தலைவலியாகவே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஒரு ரூ.1000 பணத்தை அப்படியே வைத்துவிட்டு, பல மாதங்கள் கழித்து பின்பு எடுக்க சென்றால், அது முழுவதும் இருக்காது.

சிறிது விவரம் தெரிந்தவர்களுக்கு மினிமம் பேலன்ஸ் அபாரதம் போட்டுவிட்டார்கள் என்று தெரிந்துவிடும். ஆனால், அதைப்பற்றி அறியாத சாதாரண மக்கள் அந்த பணம் எங்கே போய்விட்டது என்று நினைத்து கவலைக்கே சென்றுவிடுகின்றனர். இன்னும் சிலர், மாத கடைசியில் வேறு பணம் இல்லாமல், வங்கியில் இருக்கும் ரூ.1000 அல்லது ரூ.500-யை எடுக்க சென்றால், அப்போதும் அந்த பணம் அபராத பிடித்தம் செய்யப்பட்டிருக்கும்.

இதுபோன்று பல கதைகள் மினிமம் பேலன்ஸ் அபராதத்தை சுற்றியிருக்கிறது. இதற்கு வங்கி கணக்கை முறையாக பராமரிக்காததுதான் காரணம் என்பதையும் மறுக்க முடியாது. இப்படிப்பட்ட மினிமம் பேலன்ஸ் அபராதத்துக்கு புதிய விதிகளை ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா கொண்டுவந்துள்ளது. இதுதொடர்பான விதிமுறைகளை அனைத்து வங்கிகளுக்கு அனுப்பி வைத்துள்ளது.

ஆர்பிஐ மினிமம் பேலன்ஸ் ரூல்ஸ் (RBI Minimum Balance Rules) என்ன சொல்கிறது? இந்த புதிய விதிமுறைகளின்படி 2 ஆண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு பணப்பரிவர்த்தனையும் செய்யாத வங்கி கணக்குகளில் இருந்து எந்தவித மினிமம் பேலன்ஸ் அபாராதமும் வசூலிக்கப்படக்கூடாது. ஏனென்றால், அந்த வங்கி கணக்குகள் செயலற்ற கணக்குகளாக (Inoperative Accounts) எடுத்து கொள்ளப்பட வேண்டும்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )