கைதானால் மொபைலுக்கு குறுஞ்செய்தி வரும்: வலைப்பின்னல் முறையில் கலக்கும் தமிழகம்
குற்றவாளியின் முழு விவரங்களும் ஆன்லைன் எப்ஐஆரில் இருக்கும்
கம்ப்யூட்டரில் பதியப்படும் ஆன் லைன் எப்ஐஆரில் குற்றவாளியின் அனைத்து விவரங்களும் இருக்கும் வகையில் ஒருங்கிணைந்த வலைப் பின்னல் திட்டத்தை தமிழகம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது. இதன்படி இனி யாராவது கைதானால் அடுத்த நிமிடமே அவர்களின் ரத்த உறவுகளுக்கு மொபைலில் குறுஞ்செய்தி வரும்.
நாடு முழுவதும் குற்றம் மற்றும் குற்றவாளிகளைக் கண்காணிக்கும் ‘சிசிடிஎன்எஸ்’எனப்படும் கிரைம் அண்ட் கிரிமினல் ட்ராக்கிங் நெட் வொர்க் சிஸ்டத்தை அனைத்து மாநிலங்களிலும் செயல்படுத்த மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. தமி ழகத்தில் இத்திட்டத்தை வெற்றிகர மாக நடைமுறைப்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள ஆயி ரத்து 500 காவல் நிலையங்களும் ஏற்கெனவே கணினிமயமாக்கப் பட்டு ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன.
அடுத்தகட்டமாக உச்ச நீதி மன்றம் மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகள்படி மாநிலம் முழுவ தும் உள்ள குற்றவியல் நீதிமன் றங்கள், காவல் நிலையங்கள், சிறைச்சாலைகள் மற்றும் தடய அறிவியல் துறையை ஒருங்கிணைக் கும் வகையில் ஒருங்கிணைந்த குற்றவியல் வலைப்பின்னல் நீதி பரிபாலனம் (இன்டெக்ரேட்டட் கிரிமினல் ஜஸ்டிஸ் சிஸ்டம்) ஏற் கெனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இனி காவல் நிலை யங்களில் முதல் தகவல் அறிக் கையை கம்ப்யூட்டரில் மட்டுமே பதிய வேண்டும் என்றும், இவ்வாறு பதியப்படும் டைப்-1 ஆன்லைன் எப்ஐஆரில் குற்றவாளியின் முழு ஜாதகமும் இடம்பெறும் வகையில் அனைத்து தகவல்களும் இடம் பெற வேண்டும் எனவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. ஒருவேளை மின் சாரம், கம்ப்யூட்டர் போன்றவற்றில் பழுது ஏற்பட்டால் டைப்-2 எனப் படும் கையால் எழுதப்படும் எப்ஐஆரை பதிவு செய்ய வேண்டும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய முடியாத எப்ஐஆர் குறித்து டிஎஸ்பி அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி முடிவு செய்ய வேண்டும் எனவும் மாநில குற்ற ஆவண காப்பகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும், கடந்த பிப்ரவரி 6-ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் குற்றவாளியின் கைது மற்றும் சரண்டர் விவரம், ஆஜர் மகஜர், நீதிமன்ற காவல் அடைப்பு, இறுதி அறிக்கை, குற்றப்பத்திரிக்கை, ஜாமீன் போன்ற நீதித்துறை தொடர் பான அனைத்து விவரங்களையும் கம்ப்யூட்டரில் பதிவு செய்து, அவற்றை நகல் எடுத்து நீதிமன் றத்தில் தாக்கல் செய்யவும் உத்தர விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அரசு குற்ற வழக்கு தொடர்புத்துறை இயக்குநர் எஸ்.சண்முகம் கூறியதாவது:
நீதித்துறை, காவல்துறை, சிறைத்துறை மற்றும் தடயஅறிவி யல் ஆகிய துறைகளை ஒருங் கிணைப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் இனி காவல் நிலையங்களில் எப்ஐஆரை மாற்ற முடியாது. ஒருமுறை கம்ப் யூட்டரில் பதிவு செய்தால் அதை உயரதிகாரிகளின் அனுமதியின்றி திருத்தவும் முடியாது. குறிப்பாக இனி யாராவது கைது செய்யப்பட் டால் அடுத்த நிமிடமே அவர்களின் ரத்த உறவுகளுக்கு மொபைலில் குறுஞ்செய்தி சென்றுவிடும். அதில் இந்த குற்ற வழக்கு எண்ணில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்ற விவரம் தெரிவிக்கப்படும்.
ஏற்கெனவே சிசிடிஎன்எஸ் சிஸ் டம் மூலமாக காவல் நிலையங்கள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. அடுத்தகட்டமாக நீதிமன்றங் களோடு காவல் நிலையங்களும், சிறைச்சாலைகளும், இதரத்துறை களும் இணைக்கப்படும். இதன் மூலம் இந்தியாவில் எந்த மூலை யில் இருந்துகொண்டும் ஒரு குற்ற வாளியைப் பற்றியோ அல்லது குற்றம் தொடர்பான ஆவணங் களையோ ஆன்லைனில் உடனுக் குடன் பெற முடியும்.
மேலும் எப்ஐஆர், குற்றப் பத்திரிக்கை, நீதிமன்ற அடைப்பு காவல் அறிக்கை, மருத்துவ அறிக்கை, விபத்து அறிக்கை என துறை ரீதியாக தேவைப்படும் ஆவணங்களையும் ஆன்லைன் மூலமாக பெற்று விரை வான நீதிபரிபாலனம் பொதுமக்க ளுக்கு கிடைக்க வழிவகுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.