கிராமங்களில் 23 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் பிடிஐ
மக்களவையில் நேற்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு மத்திய குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது:
நாட்டில் நிலத்தடி நீர் வளத்தை அதிகரிக்க செய்வதற்காக, கிராமப்புறங்களில் 23 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை செயற்கையாக உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. நகர்ப்புறங் களில் 88 லட்சம் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். இதற்காக பிரம்மாண்ட திட்டத்தை மத்திய நிலத்தடி நீர் வாரியம் தயாரித்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் நிலத்தடி நீர் வளத்தை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீர் ஆதார விஞ்ஞானிகள், நிபுணர்களின் உதவியுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படும். இவ்வாறு அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறினார்.