தமிழகத்தில் மட்டும் ரூ.25 கோடி பினாமி சொத்துகள் சிக்கின!
தமிழகத்தில் சில மாதங்களில், பினாமி பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ், 25 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, தமிழக வருமான வரி புலனாய்வு துறை அதிகாரிகள் கூறியதாவது:
நாடு முழுவதும், பினாமி சொத்து தடுப்பு சட்டத் திருத்தம், 2016 நவம்பரில், அமலுக்கு வந்தது.
அதன்படி, பினாமி பெயரில் ஒருவரின்
சொத்துகள் இருந்தாலோ, ஒருவரின் வங்கி கணக்கில், மற்றொருவரின் பணத்தை பதுக்கி னாலோ, அது குற்றமாகும். அச்சட்டம் அமலான பின், தமிழக பத்திரப்பதிவு அலுவலகங் களிடம், தகவல்திரட்டப்பட்டது.
தமிழகத்தில் வருமான வரி செலுத்தும், 27 லட்சம் பேரில், 18 லட்சம் பேரின் கணக்குகள், கண்காணிக் கப்பட்டு வருகிறது. இதன் முடிவில், இதுவரை, 25 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையும் மற்றும் அசையா சொத்துகள், பினாமி சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு அவர்கள் கூறினர்.