கொல்கத்தாவில் பிளாஸ்டிக் முட்டை விற்றவர் கைது: பிளாஸ்டிக் முட்டையால் உயிரிழப்பு ஏற்படும் என எச்சரிக்கை
பிளாஸ்டிக் முட்டையை விற்றதாக கொல்கத்தாவில் கடைக்காரர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். கொல்கத்தா பாக் சர்க்கஸ் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் கடை வைத்துள்ள முகமத் ஷமீம் அன்சாரி என்பவரே கைது செய்யப்பட்டவர். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட முட்டையை விற்பனை செய்தார் என்பதே அவர்மீதுள்ள குற்றச்சாட்டு.
ஒரு பெண் கொடுத்துள்ள புகாரில் கைது செய்யப்பட்டுள்ள அன்சாரி இதுகுறித்து தனக்கு எதுவும் தெரியாது என்று தெரிவித்துள்ளார். பொதுமக்கள் முட்டைகளை வாங்கும்போது எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று கொல்கத்தா மேயர் சோபன் சட்டோபாத்தியா கூறியுள்ளார். அதேபோல கடைகள் மற்றும் கோழி பண்ணைகளில் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் முட்டைகள் இருப்பதை கண்டிறிந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் எச்சரித்துள்ளார்.