முடக்கும் மூட்டுவலி..!
முன்பெல்லாம் வயதானவர்களை மட்டுமே பாதித்து வந்த முழங்கால் மூட்டுவலி, இப்போது இளம் வயதினரையும் வாட்டி எடுக்க ஆரம்பித்திருக்கிறது. நடப்பதற்கு சோம்பேறித்தனம் பட்டு, சொகுசு கார், இருசக்கர வாகனம் போன்ற வாழ்க்கை முறை, உணவு பழக்கம், உடற்பயிற்சி இல்லாதது போன்றவைகள்தான் மூட்டுவலி உண்டாக பிரதான காரணங்கள். மூட்டுவலி ஏற்பட்டால் இயல்பாக நடக்க முடியாது. உட்கார்ந்து எழுவதில் சிரமம் ஏற்படும். தவிர, நாள்பட்ட மூட்டுவலியால் வேறு பல உபாதைகளும் உண்டாகும். இவற்றை எளிதில் தவிர்க்க முடியும். அதற்கென நவீன சிகிச்சைகளும் வந்துவிட்டன.
முழங்கால் மூட்டுவலியால், இணைப்புகளில் திடீரென வீக்கம் அல்லது அழற்சி உண்டாகும். ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ், ரூமட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் என்று இரண்டு வகை உண்டு. இவை இரண்டும் பெண்களை எளிதில் தாக்கும் நோய் என்பது அதிரவைக்கும் உண்மை.மூட்டுவலி வர காரணம், மூட்டு தேய்மானமே. இந்த பிரச்னை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வர காரணம், நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால்தான் நம் நாட்டில், கால் மூட்டிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது. தகுந்த மருத்துவரை அணுகி, ஆரம்ப நிலையிலேயே தீர்வு காண்பதே சிறந்தது.