சில்லி கார்லிக் நூடுல்ஸ்
என்னென்ன தேவை?
நூடுல்ஸ் – 200 கிராம்
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது- 1 டேபிள் ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 3 முதல் 4
கேரட் – 1
முட்டைக்கோஸ் – 1 கப்
குடைமிளகாய் – 2 கப்
சில்லி பூண்டு பேஸ்ட்- 2 முதல் 3 டேபிள் ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
சர்க்கரை – சுவைக்கு
சோயா சாஸ் – 1 தேக்கரண்டி
வெங்காய தாள் – சிறிது
எப்படிச் செய்வது?
ஒரு கிண்ணத்தில் தண்ணீரை கொதிக்க விட்டு உப்பு மற்றும் நூடுல்ஸ் சேர்த்து வேக விடவும். கடாய் ஒன்றில் எண்ணெய் எடுத்து சூடான பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி காய்ந்த மிளகாய், கேரட், முட்டைக்கோஸ், குடைமிளகாய் சேர்த்து டாஸ் செய்யவும். தேவையான அளவு உப்பு மற்றும் சர்க்கரை சிறிதளவு சேர்த்து வதக்கவும். இப்போது சில்லி பூண்டு பேஸ்ட், சோயா சாஸ் சேர்த்து கலந்து வேக வைத்த நூடுல்ஸையும் போட்டு நன்கு டாஸ் செய்து வெங்காய தாள் சிறிது தூவி பரிமாறவும்.