தனது கணவர் இறந்த செய்தியை தானே நேரலையில் வாசித்த செய்தியாளர்
தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசித்தபோது தன் கணவர் இறந்த செய்தியை தானே செய்தியாக வாசித்த துயர சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. தனியார் செய்தித் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணி புரியும் சுப்ரீத் கவுர் என்பவர், நேற்று நேரலையில் செய்தி வாசித்துக் கொண்டிருந்துள்ளார். சத்தீஸ்கரில் உள்ள மகாசமுந்த் என்ற இடத்தில் ரெனால்ட் டஸ்ட்டர் வாகனத்தில் 5 பேர் பயணித்தனர். அந்த கார் விபத்துக்குள்ளானது இதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 2 பேர் படுகாயமடைந்து மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான தகவல்களை, செய்தியாளரிடம் நேரலையில் அவர் கேட்டுள்ளார்.
அப்போது அந்த விபத்தில் தனது கணவரும் உயிரிழந்த செய்தி, சுப்ரீத் கவுருக்கு தெரிய வந்தது. இதையடுத்து நேரலை முடிந்ததும் செய்தி வாசிப்பாளர் சுப்ரீத் கவுர், தொலைக்காட்சி நிலையத்திலிருந்து வெளியேறினார். ஒரு வடத்திற்கு முன்பு சுப்ரீத் கவுருக்கு திருமணமான நிலையில், விபத்தில் அவர், தனது கணவரை இழந்தது செய்தியை நேரலையின்போது தெரிந்து கொண்டது, சக ஊழியர்களையும் அதிர்ச்சி அடைய செய்தது.