விஜய் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட தனுஷ் பட நடிகை!!
பல நாயகிகள் விஜய்யுடன் நடனமாடுவது கடினமானது என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் திருப்பாச்சி படத்தில் விஜய்யுடன் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பார் நடிகை சாயா சிங்.
இவர் ஒரு பேட்டியில் விஜய்யுடன் நடனம் ஆடியது குறித்து பேசியிருந்தார். சாய சிங் கூறியது, விஜய்யுடன் நடனம் என்றதும் மிகவும் படபடப்பாக இருந்தது. அவர் ஒரே ஒரு தடவை பார்த்துவிட்டு அப்படியே ஆடிவிடுவார். ஆனால் நான் நிறைய டேக் வாங்குவேன். இதனால் நான் விஜய் சாரின் காலிலேயே விழுந்து மன்னிப்பு கேட்டு விடுவேன் என தெரிவித்தார்.
ஆனால் விஜய் இதை எல்லாம் பெரிது படுத்தாமல் சரியாக வரும் வரை, பரவாயில்லை நீங்கள் ஆடுங்கள் என்று பொறுமையாக கூறுவார் என தெரிவித்துள்ளார்.