‘வடசென்னை’ படப்பிடிப்பு தாமதம் ஏன்?- இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்
‘வடசென்னை’ படப்பிடிப்புக்கு இடையே இடைவெளி ஏன் என்று இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமலாபால், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிப்பில் தொடங்கப்பட்ட படம் ‘வடசென்னை’. வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். லைகா நிறுவனம் முதல் பிரதி அடிப்படையில் தயாரித்து வருகிறது.
‘வடசென்னை’ படப்பிடிப்பு தொடங்கிய சில நாட்கள் நிறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ‘ப.பாண்டி’ மற்றும் ‘வேலையில்லா பட்டதாரி 2’ ஆகிய படங்களில் கவனம் செலுத்தத் தொடங்கினார் தனுஷ். இதற்கான காரணம் என்ன என்பது தெரியாமல் இருந்தது.
முதன் முறையாக ‘வடசென்னை’ படப்பிடிப்பில் தாமதம் ஏன் என்று வெற்றிமாறன், “‘விசாரணை’யின் ஆஸ்கர் பரிந்துரைக்காக தயாராக இன்னும் நேரம் வேண்டும் என தனுஷிடம் நான் தான் கேட்டேன். வேறெந்த தயாரிப்பாளராக இருந்தாலும் இதற்கு அனுமதித்திருக்க மாட்டார்கள்.
ஆனால் தனுஷ் பெருந்தன்மையாக ஒப்புக்கொண்டதுடன் அவரது மற்ற இரண்டு படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்” என தெரிவித்துள்ளார் வெற்றிமாறன்.
மேலும், தனுஷ் நடிப்பில் உருவான படங்களைவிட, அதிக பொருட்செலவில் ‘வடசென்னை’ உருவாகி வருகிறது என படக்குழு தெரிவித்துள்ளது.