கராத்தே போட்டியில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள்
யுஎஸ் ஓபன் கராத்தே சாம்பியன் ஷிப் போட்டி அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் நகரில் கடந்த 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை நடைபெற்றது.
இந்த தொடரில் யாஷ்பால் சிங் தலைமையில் பங்கேற்ற இந்திய அணி 3 தங்கம், 2 வெள்ளி, 6 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது. கடந்த ஆண்டு தங்கப் பதக்கம் வென்ற யாஷ்பால் சிங் இம்முறை வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.
18 முதல் 35 வயதுக் குட்பட்டோருக்கான கட்டா தனிநபர் பிரிவில் ஷெய்பாலி அகர்வால், அபிஷேக் சென்குப்தா ஆகியோர் தங்கமும் குமிதி பிரிவில் இவர்கள் இருவரும் வெள்ளிப் பதக்கமும் வென்றனர். கட்டா அணிகள் பிரிவில் ஷெய்பாலி அகர்வால், ஹர்சரண் சிங், அபிஷேக் சென் குப்தா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய தங்கப் பதக்கம் கைப்பற்றியது.
யாஷ்பால் சிங் ஒரு வெண் கலமும் ரன்டெஜ் சிங், ஹர்சரண் சிங் ஆகியோர் தலா இரு வெண்கலப் பதக்கமும் வென்றனர். கட்டா அணிகள் பிரிவில் இந்தியாவுக்கு வெண்லகப் பதக்கம் கிடைத்தது.