சென்னை: வெளியேறும் ரசாயன கலவை
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை கிழக்கு முத்தையா தெருவில் மெட்ரோ திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் அடிக்கடி பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவைகளும், சிமென்ட் கலவைகளும் வெளியேறி வருகிறது. இந்நிலையில் இன்று மீண்டும் பூமிக்கு அடியில் இருந்து ரசாயன கலவை வெளியேறி உள்ளது. மெட்ரோ பணியால் சென்னையில் அங்காங்கே திடீர் பள்ளங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், தற்போது ரசாயன கலவைகளும் வெளியேறி வருவதால் மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.