ஆதார் விவரங்களை சேகரித்த எட்டு இணையதளங்கள் மீது புகார்
ஆதார் விவரங்களை அனுமதியின்றி மக்களிடமிருந்து சேகரித்து வந்த 8 இணையதளங்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு வழங்கி வரும் ஆதார் அடிப்படையிலான சேவைகளை, பொது மக்களுக்கு பெற்றுத் தருவதாக கூறி அனுமதியின்றி மக்களிடமிருந்து ஆதார் விவரங்களை சேகரித்து வந்ததாக கூறி, 8 நிறுவனங்கள் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விசாரணையில், இணையதளங்கள் தங்களை ஆதார் நிறுவனம் அங்கீகரித்தாக கூறி மக்களை ஏமாற்றியதும் தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ஆதார் வழங்கும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பூஷண் பாண்டே தெரிவிக்கையில், ‛ஏற்கனவே இது போன்ற சேவைகளை வழங்குவதாக கூறி ஏமாற்றிய இணையதளங்களை மூடுவதற்கு உத்தரவிட்டதாகவும், அந்த இணையதளங்களின் மீது கடும் நடவடிக்கைத் தொடரும்’ எனவும் தெரிவித்தார்.