பரபரப்பான சூழ்நிலையில் நாளை எடப்பாடி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்புகள் அரங்கேறிவரும் நிலையில், நாளை (செவ்வாய்க் கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.
இரு நிபந்தனைகளையும் ஏற்றுக்கொண்டால் மட்டுமே பேச்சுவார்த்தை என்று ஓபிஎஸ் தரப்பு உறுதியாகக் கூறிவிட்டனர்.
சேலத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, கட்சியும் ஆட்சியும் நம்மிடத்தில் உள்ளது.
90 சதவீத தலைமை நிர்வாகிகள் நம்மிடத்தில் உள்ளனர். எனவே, பிரிந்து சென்றவர்கள் இணைந்தாலும் பரவாயில்லை; இணையாவிட்டாலும் பரவாயில்லை என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஒரு மாதம் ஓ.பன்னீர்செல்வம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிமுக தொண்டர்களைச் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், நாளை காலை 11 மணிக்கு சென்னையில் உள்ள தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் நீட் தேர்வு, விவசாயிகள் பிரச்சினை, டாஸ்மாக் எதிர்ப்பு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகள் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.