கருப்பு இனத்தவர் கொலை: 2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு இல்லை டிரம்ப் நிர்வாகம் எடுத்த முடிவால் பரபரப்பு
இந்த படுகொலை தொடர்பான கண்டன பேரணிகளில் வன்முறை மூண்டு பலர் பலியாகினர்.
இந்த நிலையில் ஆல்டன் ஸ்டெர்லிங்கை சுட்டுக்கொன்ற 2 போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த தேவையில்லை என்று அமெரிக்க நீதித்துறை முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக அந்த பேட்டன்ரூஜ் நகர மேயருக்கோ, ஆல்டன் ஸ்டெர்லிங் குடும்பத்தினருக்கோ தகவல் தெரிவதற்கு முன் ஊடகங்களில் செய்திகள் கசிந்தன.
இதையடுத்து சம்பவம் நடந்த பகுதியில் நேற்று முன்தினம் மக்கள் கூடத்தொடங்கியதால் பெரும் பரபரப்பு நிலவியது. பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. டிரம்ப் தலைமையில் புதிய அரசு பதவி ஏற்று, புதிய அட்டார்னி ஜெனரலாக ஜெப் செசன்ஸ் வந்திருப்பதே வெள்ளை இன அதிகாரிகள் மீதான வழக்கை கை விடக்காரணம் என தகவல்கள் கூறுகின்றன.