18-ம் தேதி வருகிறது ‘விவேகம்’ டீசர்
வீரம்’, ‘வேதாளம்’ படங்களைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா-அஜித் காம்போவில், ஹாட்ரிக் அடிக்கும் முனைப்பில் உருவாகி வரும் படம், ‘விவேகம்’. அனிருத் இசையமைக்கிறார். விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஏற்கெனவே, இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்கள் வெளியாகி வைரலாகி இருந்தன.
இதனால், படத்துக்கு எதிர்பார்ப்புகள் எகிறி உள்ளது. இந்த நிலையில், அஜித்தின் பிறந்தநாளான கடந்த 1-ம் தேதி, படத்தின் டீசர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் படத்தின் டீசர் வெளியிடப்படவில்லை. அதற்குப் பதிலாக, கடந்த 30-ம் தேதி படத்தின் மற்றொரு போஸ்டர் வெளியிடப்பட்டு இருந்தது. ஆனால், அதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
இந்த நிலையில், படத்தின் டீசர் வரும் 18-ம் தேதி வெளியிடப்படும் என்று இயக்குநர் சிவா, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும், அஜித்துடன் இணைந்து எடுத்துள்ள போட்டோ ஒன்றையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.