ஆசிய குத்துச்சண்டை போட்டி: சிவா தாபா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
ஆசிய குத்துச்சண்டை போட்டி யில் இந்திய வீரர்களான சிவா தாபா, சுமித் சங்வான் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.
உஸ்பெகிஸ்தானின் தாஷ் கண்ட் நகரில் ஆசிய குத்துச் சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதன் 60 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் 4-ம் நிலை வீரரான இந்தியாவின் சிவா தாபா, ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவரும் முதல் நிலை வீரருமான மங்கோலியாவின் டோர்ஜினம்பூக் ஓட்கொண்டலை தோற்கடித்தார்.
சிவா தாபா இறுதிப் போட்டியில் உஸ்பெகிஸ்தானின் எல்னூர் அப்துரையோவை எதிர்த்து விளையாடுகிறார். கடந்த ஆண்டு லைட் வெயிட் பிரிவுக்கு மாறிய சிவா தாபா, முதன் முறையாக இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார்.
91 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் சுமித் சங்வான், 2-ம் நிலை வீரரான தஜகிஸ்தானியின் ஜாகான் குர்பனோவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். 75 கிலோ எடைப் பிரிவு அரை இறுதியில் இந்தியாவின் விகாஷ் கிருஷன், கொரியாவின் லீ டாங்யனுடன் மோதுவதாக இருந்தது.
ஆனால் போட்டியில் இருந்து விகாஷ் கிருஷன் வெளியேறி யதால் லீ டாங்யன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு இறுதிப் போட்டிக்கு முன்னேறி னார். வெண்கலப் பதக்கம் பெற்ற விகாஷ் கிருஷன், அரை இறுதியில் இருந்து வெளியேறியது ஏன் என்பது முறைப்படி அறிவிக் கப்படவில்லை.