கல்விக் கடன் விவரங்களை வி.எல்.பி. இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்: வங்கிகளுக்கு நிதி அமைச்சகம் சுற்றறிக்கை
ஆகஸ்ட் 15, 2015-க்கு பிறகு வழங்கப்பட்ட கல்விக் கடன்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் கல்விக் கடன் திட்டத்துக்காக தொடங்கப்பட்ட ‘வித்யா லட்சுமி போர்ட்டல் (வி.எல்.பி)’ இணையத்தில் செப்டம்பர் 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும் என வங்கிகளை மத்திய நிதி அமைச்சகம் வலியுறுத்தி இருக்கிறது.
கல்விக் கடன்களை வழங்குவதி லும் திருப்பி வசூலிப்பதிலும் உள்ள குறைபாடுகளைக் களை வதற்காக, ஆகஸ்ட் 15, 2015-ல் வி.எல்.பி. இணையத்தைத் தொடங் கியது மத்திய நிதி அமைச்சகம். ஆனால், 7 தனியார் வங்கிகள், 3 கூட்டுறவு வங்கிகள் உட்பட 38 வங்கிகளில் மட்டுமே இந்த இணையம் வழியாக கல்விக் கடன் தொடர்பான நடைமுறைகள் கையாளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ‘எஜூகேஷன் லோன் டாஸ்க் ஃபோர்ஸ்’ (இ.எல்.டி.எஃப்) அமைப்பானது கடந்த பிப்ரவரி 17-ல் கல்விக் கடன் விழிப்புணர்வு தொடர்பாக சென்னையில் கருத்தரங்கு நடத்தியது. இதில் கலந்துகொண்ட மத்திய நிதித்துறை இணை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வாலிடம், ‘வி.எல்.பி. இணையத்தை வங்கிகள் முறையாக பயன்படுத்தவில்லை’ என்று இந்த அமைப்பு புகார் தெரிவித்தது.
இந்நிலையில், மத்திய நிதி அமைச்சகம் தற்போது அனைத்து வங்கிகளுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறது. அதில், “வங்கிகள் அனைத்து விதமான கல்விக் கடன் மனுக்களையும் வி.எல்.பி. இணையம் வழியாகவே பெற வேண்டும். அடுத்த கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்ன தாக, கல்விக் கடன் திட்டங்கள் தொடர்பாகவும் வி.எல்.பி. இணை யம் குறித்தும் கல்வி நிறுவனங் களுடன் இணைந்து வங்கிகள் விழிப்புணர்வு கருத்தரங் குகளை நடத்த வேண்டும்.
அனைத்து வங்கிகளும் கல்வி நிறுவனங்களும் வி.எல்.பி. இணையம் குறித்து வங்கிக் கிளைகள், ஏ.டி.எம் மற்றும் கல்வி நிறுவனங்களின் முகப்புகளில் பேனர்களை வைக்க வேண்டும். அனைத்து வங்கிகளும் ஆகஸ்ட் 15, 2015-க்கு பிறகு வழங்கிய கல்விக் கடன் விவரங்களை செப்டம்பர் 30-ம் தேதிக்குள் வி.எல்.பி. இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வியாளர்கள் கூறும்போது, “இதில் உள்ள அம்சங் களை முறையாக அமல்படுத் தினால் கடன் வழங்குவதிலும் வசூலிப்பதிலும் வெளிப்படைத் தன்மை இருக்கும். தகுதியான அனைவருக்கும் கல்விக் கடன் கிடைக்கும். கல்விக் கடன் தொடர் பான 90 சதவீத குளறுபடிகளுக்கு தீர்வு ஏற்பட்டுவிடும்’’ என்கிறார்கள்.