
ஏப்ரல் 15ம் தேதி திருநங்கையர் தினம் – திருநங்கையர்கள் முன்மாதிரி விருது மற்றும் ரூ1 லட்சம் பெற விண்ணப்பிக்கலாம் – மாவட்ட ஆட்சியர் தகவல்
2023-2024 ம் ஆண்டுக்கான திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட உள்ளதால் இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் (awards.tn.gov.in) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி தகவல்
திருநங்கைகள் இச்சமூகத்தில் அவர்கள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி, தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து, தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கௌரவிக்கும் வகையில், மற்ற திருநங்கையர்களை ஊக்குவிக்கும் வகையில் திருநங்கையர் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15ம் தேதியன்று ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான முன்மாதிரி விருதானது ரூ1,00,000/- காசோலை மற்றும் சான்று வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து 2023-2024 ம் ஆண்டுக்கான திருநங்கையர்களுக்கான முன்மாதிரி விருதானது திருநங்கையர் தினமான ஏப்ரல் 15ம் தேதி வழங்கப்பட உள்ளதால் இவ்விருதுக்கான விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் (awards.tn.gov.in) पक्राउंល់ 26.12.2023 முதல் 31.01.2024 வரை இணையதளத்தில் பதிவு செய்து உயிர் தரவு (Bio data) மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ-2, சுயசரிதை, தனியரை பற்றி விவரம் (ஒரு பக்க அளவில்)- Soft & Hard Copy, விருதுகளின் விபரம் (விருது பெற்றிருப்பின் அதன் விபரம் / விருதின் பெயர் யாரிடமிருந்து பெற்றது மற்றும் பெற்ற வருடம்), சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையை பாராட்டி பத்திரிக்கை செய்தித்தொகுப்பு, சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக சேவையாளரின்/ சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூக பணியாளர் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கை ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றுடன் சேர்த்து அதற்கான கருத்துருவை 31.01.2024 அன்று மாலை ஐந்து மணிக்குள் மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், 628101 – Ph.No-0461-2325606 என்ற முகவரியில் சமர்ப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதி, தெரிவித்துள்ளார்.