
முடி திருத்தும் தொழிலாளியை கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து தூத்துக்குடி செஷன்ஸ் கோர்ட் தீர்ப்பு
24.3.2017 ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் புளியநகர் சந்திப்பில் முருகன் என்பவரின் முடி திருத்தும் கடையில் முடி வெட்டிவிட்டு, முடி வெட்டியதற்கு பணம் கொடுக்காமல் சென்ற பொன்சேகர் என்பவரிடம் பணம் கேட்ட முருகனிடம் பணம் கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் பேசி, அருகில் கிடந்த மர பட்டியலால் முருகனின் தலையின் பின்புறம் அடித்துள்ளார். இதில் முருகன் உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கு விசாரணை தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி செல்வம் 30/01/2024 அன்று குற்றம் சாட்டப்பட்ட பொன் சேகருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.இவ்வழக்கில் அரசு தரப்பில் மாவட்ட முதன்மை குற்றவியல் அரசு வழக்கறிஞர் மோகன்தாஸ் சாமுவேல் ஆஜரானார்.
CATEGORIES மாவட்டம்