Breaking News
சோனியா உடல் நிலையில் முன்னேற்றம்: விரைவில் ‘டிஸ்சார்ஜ்’

உணவு ஒவ்வாமையால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள, காங்., தலைவர் சோனியாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், ஓரிரு நாட்களில் அவர், ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அவதி:

காங்., தலைவர் சோனியா,70, உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகிறார். உடல் பரிசோதனைக்காக, அடிக்கடி வெளிநாடு செல்லும் அவர், அங்கு சில நாட்கள் தங்கியிருந்து, அதன் பின், நாடு திரும்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.

முன்னேற்றம்:

இந்நிலையில், இம்மாதம், 7ல் உணவு ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட சோனியா, டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே, சோனியாவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

‘டிஸ்சார்ஜ்’:

இதுகுறித்து, கங்காராம் மருத்துவமனை டாக்டர்கள் கூறியதாவது: உணவு ஒவ்வாமையால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியாவின் உடல் நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது. அவர் தற்போது நல்ல நிலையில் உள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து டாக்டர்கள் குழு ஆலோசித்து வருகிறது. முழுமையாக உடல் நலம் தேறியவுடன், அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.