இந்திய தூதர் போன் பறிப்பு : பாகிஸ்தானில் பரபரப்பு
பாகிஸ்தானில், இந்திய பெண் உஸாமா தொடர்பான வழக்கு விசாரணைக்காக, கோர்ட்டிற்கு நேற்று வந்த, இந்திய துணை துாதரின், ‘மொபைல் போன்’ பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுற்றுலா விசா : இந்திய பெண்ணான உஸாமா, 20 பாகிஸ்தானை சேர்ந்த தாஹிர் அலியை, மலேஷியாவில் சந்தித்து காதலித்தார். அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த உஸாமா, சுற்றுலா விசா பெற்று, மே, 1ல், பாக்., சென்றார்; அங்கு, மே, 3ல் இருவருக்கும் திருமணம் நடந்தது.ஆனால், தாஹிர் ஏற்கனவே திருமணமாகி, நான்கு குழந்தைகளுக்கு தந்தை என்பது, பிறகு, உஸாமாவுக்கு தெரிய வந்தது.இதையடுத்து, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய துாதரகம் சென்று அடைக்கலம் புகுந்த அவர், ‘இந்தியா திரும்பும் வரை, துாதரகத்தை விட்டு வெளியேற மாட்டேன்’ என கூறி போராட்டம் நடத்தி வருகிறார்.ஆனால், தன் மனைவி உஸாமாவை, சட்டவிரோதமாக, இந்திய துாதரகம் அடைத்து வைத்திருப்பதாக, தாஹிர் அலி கூறி வருகிறார்.இது தொடர்பான வழக்கு, பாகிஸ்தானில் உள்ள இஸ்லாமாபாத் கோர்ட்டில் நேற்று ிசாரணைக்கு
வந்தது.
ஒப்படைப்பு
அப்போது, வழக்கு விசாரணைக்காக, இந்திய துணை துாதர் பியுஷ் சிங்,
கோர்ட்டிற்கு வந்தார். அப்போது அவரது மொபைல் போனை காவல் துறை அதிகாரிகள் திடீரென பறித்தனர்; கோர்ட் உத்தரவுபடி நடவடிக்கை எடுத்ததாக கூறினர். பின், அவர், போலீஸ் அதிகாரிகளை சந்தித்து விளக்கம் கோரினார்.
கோர்ட்டில் நடக்கும் காட்சிகளை, அவர், மொபைல் போன் மூலம், படம் எடுக்கக் கூடும் என்ற அச்சம் காரணமாக, அதை, பறித்ததாக, காவல்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
எனினும், சிறிது நேரத்திற்கு பின், அவரிடம் மொபைல் போன்
ஒப்படைக்கப்பட்டது.