உச்சநீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும் தமிழகத்துக்கு ஒரு சொட்டு தண்ணீர் கூட திறக்கவில்லை
உச்சநீதிமன்றம் 3 முறை உத்தரவிட்டும் ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு திறக்கவில்லை என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். சாம்ராஜ்நகர் டவுனில் தொண்டு நிறுவனத்தை புத்தூர் மடாதிபதியான பரமபூஜ்ய ஜெகத்குரு சிவராத்திரி ேதசிகேந்திரா நடத்தி வருகிறார். ஏழைகளுக்கு தொண்டு செய்யும் நோக்கில் செயல்படும் இந்த நிறுவனத்தின் சார்பில் டவுனில் ₹25 கோடி செலவில் உயர்தரத்துடன் கொண்ட மருத்துவமனை புதியதாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவமனையை முதல்வர் சித்தராமையா நேற்று முன்தினம் திறந்து வைத்தார். விழாவில் உயர்கல்வித்துறை அமைச்சர் பசவராஜராய ரெட்டி, உணவுத்துறை அமைச்சர் யு.டி.காதர், கன்னட சலுவளி கட்சி தலைவர் வாட்டாள் நாகராஜ், மற்றும் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மருத்துவமனை திறப்பு விழாவை தொடந்து பெண்கள் கல்லூரியின் ெபான்விழா நிகழ்ச்சியிலும் முதல்வர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.விழாவில் முதல்வர் சித்தராமையா ேபசுகையில், மடாதிபதி நடத்தும் தொண்டுநிறுவனம் ஏழை மக்களுக்கு கல்வி, மருத்துவம் உள்ளிட்ட சேவைகளை சிறப்பாக வழங்கி வருகிறது. அதேபோல் மாநில அரசு சார்பிலும் கல்விக்கு அடுத்தப்படியாக மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். குறிப்பாக தற்போது மாநிலத்தில் 6 மருத்துவ கல்லூரிகள் உள்ளது. கூடுதலாக 6 மருத்துவ கல்லூரிகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் நோக்கம் ஏழை மாணவர்களும் மருத்துவம் படித்து வாழ்வில் வெற்றி பெற ேவண்டும்.
மேலும் நாட்டிலேயே முதன்முறையாக கற்பித்தல் மருத்துவமனை கர்நாடகாவில் அமைக்கப்படவுள்ளது. மாநிலத்தில் இதுவரை 55 லட்சம் கழிவறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது. வருகின்ற 2018ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் கூடுதலாக 28 லட்சம் கழிவறைகள் கட்டப்படும். வாட்டாள் நாகராஜ் நான் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட்டேன் என்று எல்லா இடங்களிலும் குறை கூறி வருகிறார். இந்த விஷயத்தில் நான் இதுவரை யாருக்கும் சொல்லாத ஒரு உண்மையை சொல்கிறேன், உச்சநீதிமன்றம் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க கோரி மூன்று முறை நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் நான் உத்தரவை மீறி ஒரு சொட்டு தண்ணீர் கூட வழங்கவில்லை. இதை அனைவருக்கும் சொல்லுங்கள். மைசூருவில் இருந்து பெங்களூரு வரை செல்லும் சாலையில் அதிகளவில் ஓட்டல்கள் உள்ளது. ஆனால் சிறுநீர் கழிக்க இடம் இல்லை என்று வாட்டாள் நாகராஜ் குறை கூறுகிறார். அதற்காக 2018ம் ஆண்டு அக்டோபருக்குள் 28 லட்சம் புதிய கழிவறைகள் அமைக்கப்படும்.
மாநிலத்தில் உள்ள மக்கள் யாரும் வெளியிடங்களில் மலம் கழிக்க கூடாது எனவும், மாநிலத்தை தூய்மையாக பாதுகாக்கவும், தற்போது இந்த திட்டம் செயல்படுத்தபட்டு வருகிறது என்றார். என்றார். இதை தொடர்ந்து உயர்கல்வித்துறை அமைச்சர் பசவராஜராய ரெட்டி பேசுகையில், மாநில அரசு உயர்கல்வித்துறைக்காக இதுவரை ரூ.24,600 கோடி ஒதுக்கியுள்ளது. ஆனால் மத்திய அரசோ நாடு முழுவதிற்கும் உயர்கல்வித்துறைக்காக ரூ.95 கோடி மட்டுமே ஒதுக்கியுள்ளது. ஒரு மாநிலத்திற்காக முதல்வர் சித்தராமையா இவ்வளவு நிதி ஒதுக்கும் பட்சத்தில் பிரதமர் பாரபட்சம் கட்டுவது வேதனை அளிக்கிறது.
நாட்டிலேயே முதன்முறையாக கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு போர்டிங் கல்லூரி அமைக்கப்படவுள்ளது. இங்கிலாந்தில் உள்ள இண்டர்நேஷ்னல் கல்லூரி போன்று மாநிலத்தில் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ேமலும் இந்த கல்வி ஆண்டில் படிக்கும் கல்லூரி மாணவர்களுக்கு 1.5லட்சம் லேப்டாப் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.