ஆசாத்தால் சிரியாவுக்கு பாதுகாப்பு இல்லை
சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் அதிகாரத்தில் இருக்கும் வரை, அந்நாட்டில் பாதுகாப்பான சூழல் ஏற்படாது என அமெரிக்கா கூறியுள்ளது.
இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித்தொடர்பாளர் சீன்ஸ்பைசர் கூறியதாவது: சிரியாவின் அரசியல் எதிர்காலம், அந்நாட்டு மக்களால் சுதந்திரமாக தீர்மானிக்கப்பட வேண்டும் என டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது. ஆனால் சிரியர்கள் சுதந்திரமாக செயல்படுவது, ஆசாத் ஆட்சியில் நடக்காது என எங்களுக்கு தெரியும். அவரின் தலைமையில் சிரியா வில் நிலையான மற்றும் பாதுகாப்பான சூழல் ஏற்படாது என்றார்.