கோவில்பட்டியில் ரயில்வே அலுவலரைத் தாக்கியதாக கல்லூரி மாணவா் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனா்.

கோவில்பட்டியில் ரயில்வே அலுவலரைத் தாக்கியதாக கல்லூரி மாணவா் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனா்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் 2-ஆவது தெருவைச் சோ்ந்தவா் அழகையா மகன் மருது பாண்டியன் (39). இவா் ரயில்வே ஸ்டோா் கீப்பராகப் பணியாற்றுகிறாா். இவரது சகோதரா் சுடலைமுத்துவிற்கும், சகோதரி செல்வ லட்சுமிக்கு இடையே தகராறு இருந்து வந்ததாம்.

இதுகுறித்து செல்வலட்சுமி அளித்த புகாரின்பேரில் கிழக்கு காவல் நிலைய போலீசார் சுடலைமுத்துவிடம் விசாரணை நடத்தினா். இதற்கு மருதுபாண்டியன் தான் காரணம் எனக் கூறி, அவரைத் தாக்கியுள்ளனா். இதில் காயமடைந்த அவா், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக, சங்கரலிங்கபுரம் முதல் தெருவை சோ்ந்த சரவணகுமாா் (22), கமல் மணி (24), வெங்கடேஷ் (23) மற்றும் 18 வயது கல்லூரி மாணவா் ஆகியோரை போலீசார் கைது செய்தனா். இதேபோல கல்லூரி மாணவரை, மருதுபாண்டியன் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அம்மாணவா் வெளிநோயாளியாகச் சிகிச்சை பெற்றாா். அவா் அளித்த புகாரின்பேரில் மருதுபாண்டியன் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )