
திருச்செந்தூர் அருகேயுள்ள வீரபாண்டியபட்டணம் பகுதியில் ஒரே நாளில் 3 வீடுகளில் திருட்டு – அச்சத்தில் பொதுமக்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள வீரபாண்டியன் பட்டினம் டார்லஸ் ராயன்(53). வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த 50 ஆயிரம் மதிப்பிலான மீனவர் பயன்படுத்தும் வாக்கி டாக்கி, ஜி.பி.எஸ் கருவிகள் மர்ம நபர்களால் திருடி சென்றுள்ளனர்.
இதேபோல் வீரபாண்டியன்பட்டினம் சாந்திநகர், குறிஞ்சி நகரில் ஆளில்லா இரண்டு வீடுகளில் பீரோவை உடைத்து திருட முயற்சி நடைபெற்று பணம், நகை கிடைக்காததால் வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து விட்டு சென்றுள்ளனர்.
ஒரே நாளில் 3 வீடுகளில் கதவு, பீரோ உடைத்து திருடப்பட்ட சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
CATEGORIES மாவட்டம்