குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றனர்

குத்துச்சண்டை போட்டியில் பதக்கம் வென்ற மாணவ, மாணவிகள் மேயர் ஜெகன் பெரியசாமியிடம் வாழ்த்து பெற்றனர்

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் தர்மபுரி மாவட்டத்தில் கடந்த 09.01.2024 முதல் 12.01.2024 வரை நடைபெற்றது. இதில் தூத்துக்குடி மாவட்டம் காட்டுநாயக்கன்பட்டி நடராஜன் மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த மாணவிகள் 14 வயது உட்பட்ட பிரிவில் 40-42 கிலோ எடை பிரிவில் கற்பகஜோதி 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், 42-44 கிலோ எடை பிரிவில் கனிஷ்கா 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும் பெற்றனர்.

மாணவர்கள் பிரிவில் 19 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 46-49 கிலோ எடை பிரிவில் மனோஜ் குமார் 2வது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கமும், 69-75 கிலோ எடை பிரிவில் உக்னேஷ் துனர 3வது இடம் பிடித்து வெண்கல பதக்கமும் வென்றனர். மாநிலப் போட்டியில் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி யிடம் வாழ்த்துப் பெற்றனர். நிகழ்வில் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் மற்றும் பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )