
அண்ணாவின் 55-வது நினைவு தினம்: தூத்துக்குடியில் முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை
அறிஞர் அண்ணாவின் 55 வது நினைவு நாள் முன்னிட்டு தூத்துக்குடியில் அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
சி.த. செல்லப்பாண்டியன் தலைமையில் பெருந்திரளான அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அண்ணாவின் 55வது நினைவு நாள் இன்று (பிப:3) அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி, அதிமுகவினர் தமிழகம் முழுவதும் அண்ணா சிலைகளுக்கு மரியாதை செலுத்துகின்றனர். அந்த வகையில், சென்னை பசுமைவழிச்சாலை இல்லத்தில் அண்ணா உருவ படத்துக்கு அதிமுக பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
அதுபோல் தூத்துக்குடியில் அண்ணா நினைவு நாளையொட்டி அதிமுக சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்கு
அதிமுக மாநில வர்த்தக அணி செயலாளரும் முன்னாள் அமைச்சருமான
சி.த. செல்லப்பாண்டியன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்வின் போது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பெருந்திரளானோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர்.
பேரறிஞர் அண்ணா நிறுவிய சமூகநீதி- சமத்துவம்- மாநில சுயாட்சி ஆகியவற்றைப் தொடர்ந்து பேணிக் காத்திடுவோம்’ என முன்னாள் அமைச்சர் சி.த பாண்டியன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியின் போது, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளரும் கவுன்சிலருமான வக்கீல் வீரபாகு, பகுதி செயலாளர் பொன்ராஜ், முன்னாள் நகர்மன்ற தலைவர் மனோஜ்குமார், முன்னாள் நகர்மன்ற துணை தலைவர் ரத்தினம், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பொன்ராஜ், முன்னாள் அரசு வழக்கறிஞர்கள் கோமதி மணிகண்டன், , ஆழ்வை ஒன்றிய ஜெ பேரவை செயலாளர் ராம்கோபால், மத்திய தெற்கு பகுதி அவைத்தலைவர் வக்கீல் குமார், முன்னாள் மாவட்ட மீனவரணி இணை செயலாளர் துரைப்பாண்டியன், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கி தலைவர் சிவசுப்பிரமணியன், முன்னாள் இயக்குனர்கள் அன்புலிங்கம், பாலசுப்ரமணியன், சங்கரி, டாஸ்மாக் பணியாளர்கள் சங்க மாவட்ட செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி துணைச்செயலாளர் கிருஷ்ணா ராதாகிருஷ்ணன், வடக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு இணைச் செயலாளர் கௌதம் பாண்டியன், பகுதி இணைச்செயலாளர் வீரக்கோன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி அசரியான், வட்ட செயலாளர்கள் லயன்ஸ் டவுன் சகாயராஜ், ஜெனோபர், மில்லை ராஜா, அருண்குமார், துரைசிங், அந்தோணி ராஜ், முன்னாள் மாமன்ற உறுப்பினர்கள் ஜெயக்குமார், சகாயராஜ், ஷர்மிளா அருள்தாஸ், சிறுபான்மை பிரிவு அசன், பிரபாகரன், மாவட்ட மகளிரணி துணைச் செயலாளர் ஞானபுஷ்பம், முன்னாள் வட்ட செயலாளர்கள், ஹெய்னஸ், ஜெகதீஸ், கோட்டாள முத்து, சீனிவாசன், பாபநாசம், ஜெயகோபி, சங்கர், சகாயராஜ், கருப்பசாமி, அசோகன், பாக்கியராஜ், திருமணி, போக்குவரத்து பிரிவு நிர்வாகிகள் டெரன்ஸ், பெலிக்ஸ், சங்கர், கருப்பசாமி, சண்முகராஜ், ராஜேந்திரன், பேச்சியப்பன், முருகன், ஜெயக்குமார், முருகன், ராஜ்குமார் மற்றும் சென்றிங் மனோகர், தனுஷ், மூக்கையா, அந்தோணிராஜ், ஆறுமுகம், சித்திரைவேல், மணிகண்டன், ராஜசேகர், அபுதாஹிர், சிவசாமி, வெங்கடாசலம், பொன்ராஜ், ஆறுமுக நயினார், ஆறுமுகம், சுப்புராஜ், பார் செல்வகுமார், பிச்சையா, காசி, முருகராஜ், மகளிரணி பாலம்மாள், முத்துமாரி மணிகண்டன் என்ற ஐயப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.