தூத்துக்குடியில் சுத்தியலால் அடித்து ஒருவர் கொலை- லாரி செட் உரிமையாளர் கைது

தூத்துக்குடியில் சுத்தியலால் அடித்து ஒருவர் கொலை- லாரி செட் உரிமையாளர் கைது

தூத்துக்குடியில் லாரி செட்டில் தொழிலாளியை சுத்தியலால் தாக்கி கொலை செய்த லாரி செட் உரிமையாளரை போலீசார் கைது செய்தனர். 

நாகர்கோவில் வெட்டூர்ணி மடம் வசந்த் நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துராஜ் மகன் பிரேம்குமார் (49). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு தனது குடும்பத்தினரை விட்டு பிரிந்து தூத்துக்குடி 3வது மைல் மேபாலம் அருகே உள்ள தூத்துக்குடி சண்முகபுரத்தை சேர்ந்த சோலையப்பன் மகன் தில்லை சிதம்பரம் (60) என்பவருக்கு சொந்தமான லாரி செட்டில் வேலை பார்த்து வந்தார்.

அடிக்கடி இவர் குடிபோதையில் இருப்பதால் அவரை அந்த லாரி செட் அதிபர் தில்லை சிதம்பரம் வேலையை விட்டு நீக்கி விட்டாராம். இதனால் நேற்று மாலை குடிபோதையில் வந்த பிரேம்குமார், தில்லை சிதம்பரத்திடம் தகராறு செய்தாராம். இதில் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த தில்லை சிதம்பரம் லாரி செட்டில் கிடந்த சுத்தியலால் பிரேம்குமார் தலையில் தாக்கினாராம். 

இதில் பலத்த காயமடைந்த பிரேம்குமார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் கொலை வழக்குப் பதிந்து, தில்லை சிதம்பரத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )