Breaking News
பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானி, ஜோஷி உள்ளிட்டோர் நாளை ஆஜராக உத்தரவு

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர்களின் ஒருவரான எல்.கே.அத்வானி மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை அவர்கள் ஆஜராக வேண்டும் என்பது நீதிமன்றத்தின் உத்தரவாகும். அதேவிதத்தில் நீதிமன்றத்தில் ஆஜராகுவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று அத்வானி உள்ளிட்டோர் கோரியுள்ளனர். அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் இருந்து பாபர் மசூதி கடந்த 1992-ம் ஆண்டு இடிக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் பாரதிய ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, மத்திய அமைச்சர் உமாபாரதி ஆகியோர் மீது முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு பிறகு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரித்த போது எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோருக்கு எதிராக மீண்டும் விசாரணை நடத்தும் படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

அதாவது பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு விசாரணையை ஒரு மாதத்திற்குள் தொடங்கி நாள் தோறும் நடத்த வேண்டும் என்றும், இந்த விசாரணையை விரைவில் முடித்து இரு ஆண்டுகளுக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டது. அதன்படி லக்னோ சிறப்பு சி.பி.ஐ. நீதிமன்றத்தில் பாபர் மசூதி இடிப்பு வழக்கு மீது கடந்த திங்கட்கிழமை முதல் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.