காலிஃப்ளவர் புதினா சாதம்
என்னென்ன தேவை?
காலிஃப்ளவர் – 1,
நறுக்கிய முந்திரி – 5,
புதினா இலைகள் – 1 கப்,
பட்டை, கிராம்பு – சிறிது,
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கு,
பச்சைமிளகாய் – 2,
பெரிய வெங்காயம் – 1/2 அளவு,
தேங்காய்த்துண்டுகள் – 50 கிராம்,
நல்லெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
மல்லித்தழை – சிறிது.
எப்படிச் செய்வது?
காலிஃப்ளவரை பெரிய துண்டுகளாக நறுக்கி சுத்தம் செய்து மிக்சியில் அரிசி அளவிற்கு பொடித்து கொள்ளவும். இத்துடன் உப்பு சேர்த்து இட்லி பானைத் தட்டில் வைத்து 5 நிமிடத்திற்கு வேகவைத்து இறக்கவும். காலிஃப்ளவர் உதிரியாக இருக்க வேண்டும். மிக்சியில் பச்சைமிளகாய், புதினா, தேங்காய்த்துண்டுகள், மல்லித்தழை, தேவையான தண்ணீர் சேர்த்து நைசாக அரைத்து கொள்ளவும்.
கடாயில் நல்ெலண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு தாளித்து, வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கி, முந்திரிப்பருப்பு, இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும். பின் அரைத்த விழுதைச் சேர்த்து நன்கு பச்சை வாசனை போகும்வரை வதக்கி, வெந்த காலிஃப்ளவரை கலந்து குழையாமல் வதக்கி இறக்கவும். சூடாக பரிமாறவும்.