மனைவி கண் எதிரே நீரில் மூழ்கி கணவர் உயிரிழப்பு -ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது பரிதாபம்

மனைவி கண் எதிரே நீரில் மூழ்கி கணவர் உயிரிழப்பு -ஏரல் தாமிரபரணி ஆற்றில் குளித்தபோது பரிதாபம்

தூத்துக்குடி மில்லர்புரம் அண்ணாநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் ராஜாசிங் மகன் கனகவேல் (43). இவர் தூத்துக்குடியிலுள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். நேற்று தனது மனைவி மற்றும் மகன்களுடன் மோட்டார் சைக்கிளில் தாமிரபரணி ஆற்றில் குளிக்க சென்றுள்ளார். 

அனைவரும் ஆற்றுப்பாலத்திற்கு மேற்புறம் குளித்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆற்றில் அவர் மூழ்கியுள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி கூச்சலை கேட்டுஅக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த ஏரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

CATEGORIES
Share This

COMMENTS

Wordpress (0)
Disqus (0 )